Total Pageviews

Tuesday 8 April 2014

STORY



காட்டுல விருந்து

நாம, வருஷம் தோறும் தீபாவளி, பொங்கல்னு பல பண்டிகைகளை கொண்டாறோம். அதே மாதிரி ‘சுந்தர வன காட்டில்’ ஒரு விழா விசேஷமாக நடைபெறுகிறது. அந்த விழா, வருஷத்திற்கு ஒரு முறை நடக்கும் அந்த விழாவின் போது, காட்டு விலங்குகளின் ராஜாவான சிங்கம் அரண்மனையில் ஒரு சமபந்தி விருந்து நடத்தும். இந்த விருந்துல கலந்துக்க, எல்லா மிருகங்களுக்கும் அழைப்பு உண்டு. இந்த விருந்தையொட்டி ஒவ்வொரு விலங்கும் தங்களால் முடிந்த சமையல் பொருட்களை அரண்மனையில் கொண்டு வந்து சேர்க்கும்.                                                                                      
              காட்டில நடக்குற விருந்து விழாவின் போது, ராஜா ஒவ்வொரு வீதியாக வலம் வந்து சோதனை செய்வார். அவ்வாறு தனது நரி அமைச்சருடன் விழா நேரத்தில் வலம் வந்த போது முயல்கள் வசித்த தெரு மிக அழகாக கோலம் போடப்பட்டு, பூக்கள் நிரப்பப்பட்டிருந்ததைக் கண்டு சிங்கராஜா மகிழ்ந்தார்.
 


அதே நேரத்தில் குரங்கு கூட்டம் வசிக்கும் தெரு அசிங்கமாக இருந்தது. இதனைக் கண்டு சிங்கத்திற்கு எரிச்சல் ஏற்பட்டது. தெருவை சுத்தமில்லாமல் யார் வைத்திருப்பது என சிங்கம் கேட்டபோது, குரங்கின் நண்பனும் மந்திரியுமான நரி, தந்திரமாக திருப்பி அழைத்து சென்றது.  


இந்த நிலையில் குளத்தில் ‘காட்டு விருந்து விழாவுக்காக கொக்கு தனது பங்களிப்பாக மீன்களை பிடித்துக் கரையில் போட்டது. அந்த மீன்களில் பாதியை குரங்கும், நரியும் திருடிக் கொண்டு அரண்மனைக்கு எடுத்து வந்தன.
  
அரண்மனை விருந்துக்கு தங்கள் பங்கை தருவதைப் போல திருடிய மீன்களைத் தந்தன. அந்த நேரத்தில் அரண்மனையின் சமையல் அறையில் பாயாசம் சுவையாக கொதித்துக் கொண்டிருந்தது. அந்த பாயாசத்தை விருந்தில் பரிமாறுவதற்கு முன்னர் குரங்கும், நரியும் திருடி மடக், மடக் என குடித்தன.
  

 இதனால் அவற்றின் வாய் வெந்து போனது திருட்டு புத்தி கொண்ட அந்த மிருகங்கள் அரண்மனை விருந்தில் கலந்து கொள்ள முடியாமல் அவதிப் பட்டன. வாயில் ஏற்பட்ட வெந்த புண்களின் எரிச்சலை தணிக்க குளத்துகரை தேடி ஓடின. அதே நேரத்தில் ஒழுங்கும் அமைதியும் கடைபிடித்த விலங்குகள் சிங்கராஜா அளித்த விருந்தை ரசித்து ருசித்துச் சாப்பிட்டன. நேர்மையுடன் இருந்தால், காட்டுல விருந்தில் கிடைக்கும் விசேஷ உணவுகள் போன்ற நன்மைகள் கிடைக்கும்.
 


குறுக்கு  வழியில் திருடிச் சாப்பிட்டால் உரிய விருந்தும் கிடைக்காமல் போய்விடும் என்பதைக் குரங்கும் நரியும் புரிந்து கொண்டன

**************************************



முல்லா கதைகள்


முல்லாவைப் பற்றிய கதைகள் அரபு நாட்டில் வழங்கி வருகின்றன. முல்லா மிகச் சிறந்த அறிவாளி. அவரது கதைகளின் சாராம்சம் சிந்திக்கவும், சிரிக்கவும் வைப்பவை. இனி முல்லாவின் கதைகளைப் பார்ப்போம்.



மனிதனை நம்பு


நண்பர் ஒருவர் முல்லாவைத் தேடி வீட்டிற்கு வந்தார். அவர் முல்லாவின் கழுதையை ஒரு நாளைக்கு இரவலாகப் பெற விரும்பினார். கழுதையை அன்று மாலையே திரும்பத் தருவாக, முல்லாவிடம் நண்பர் தெரிவித்தார்.

முல்லா, தனது கழுதையை நண்பருக்கு இரவல் தர விரும்பவில்லை. அடடா, சிறிது நேரத்திற்கு முன் வந்திருக்க வேண்டும். வேறு ஒரு நண்பர் இப்போதுதான் கழுதையை இரவல் வாங்கிக் கொண்டு போனார் என முல்லா கூறினார்.
 
  
நண்பர் வருத்தத்துடன் கிளம்பிய போது, வீட்டின் கொல்லைப் புறத்தில் கட்டப்பட்டிருந்த கழுதை சத்தம் போட்டது. உடனே முல்லாவின் நண்பர், “உள்ளேயிருந்து கழுதை கத்துகிறது” என்றார்.


இதைக் கேட்டதும் முல்லா, ஒருமனிதனின் வார்த்தையை நம்பாமல் ஒரு கழுதையின் வார்த்தையில் நம்பிக்கை வைக்கிறீர்கள் உங்களுக்கு என் கழுதையை இரவல் தர முடியாது என கதவைச் சாத்தினார்.
***************************************************************************************************
 
சகுனம் 
ஒரு நாள் அதிகாலையில் முல்லா படுக்கையில் இருந்து எழுந்தார். அவருக்கு மன்னரைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றியது. ஆனால் அரண்மனையில் நுழைந்த நேரம் மன்னர் தனது வீரர்களுடன் காட்டு வேட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.
   

   

முல்லா எதிரில் வந்தால் சகுனம் சரியாக இருக்காது என்ற தவறான நம்பிக்கை மக்களிடம் இருந்தது. மன்னருக்கும் அதுபற்றி தெரிந்து இருந்தது. அதனால் முல்லாவை சிறையில் அடைத்து சாட்டையடி தர உத்தரவிட்டு, வேட்டைக்கு சென்றார். 




அன்றைய தினம் மன்னருக்கு வேட்டையில் அதிக விலங்குகள் பிடிபட்டன. மன்னருக்கு மகிழ்ச்சி. அவர் அரண்மனைக்கு திரும்பியதும் உடனடியாக முல்லாவை சிறையில் இருந்து விடுவிக்கக் கூறினார்.
       முல்லாவிடம் மன்னர் பேசினார். உங்களைப் பார்த்தால் வேட்டையில் பிரச்சினை வரும் என தவறாக கருதினேன். இன்றைய வேட்டை சிறப்பாக இருந்தது என்றார். அதற்கு முல்லா பதிலளிக்கையில் அரசே நடந்ததை நினைத்து வருந்த வில்லை. ஆனால் ஒரு உண்மையைத் தெரிந்து கொண்டேன் என்றார்.
 


என்ன உண்மை புரிந்து கொண்டீர்கள்? என மன்னர் கேட்டார். நான் எதிரில் வந்ததால் உங்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. உங்களை அதிகாலை நான் கண்டதால் எனக்கு கொடுமையான தண்டனை கிடைத்து விட்டது என்றார். அதனைக் கேட்டு அரசர் மூடத்தனமான நம்பிக்கையை எண்ணி வேதனை பட்டார்.


*************************

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.