Total Pageviews

Tuesday, 28 January 2014

CEOA SCHOOL NEWS

தினமலர் (29.01.2015)

  ************************      
 பள்ளிப் பாடல்           

சி.இ.ஓ.ஏ பள்ளி
சிறுவர்கள் நாடும் பள்ளி
கண் திறக்கும் ஒளி பரப்பும்
காலத்தின் புது வெள்ளி
        பாலர்களைச் சீலர்களாய்ப்
        பண்படுத்தும் பள்ளி
        சிறியர்களை அறிஞர்களாய்ச்
        சிறக்க வைக்கும் பள்ளி
        மழலைகளைத் தலைவர்களாய்
        வளர்த்துவிடும் பள்ளி
                           (சி.இ.ஓ.ஏ பள்ளி..)
        தளிர்கள் இங்குப் பயிலவந்தால்
        மலர்களாய் உருவாகும்
        மலர்கள் இங்குப் பயிலவந்தால்
                       நிலவுகளாய் மாறும்
                       நிலவு இங்குப் பயிலவந்தால
                       சூரியனாய் மாறும்.

                         (சி.இ.ஓ.ஏ பள்ளி...)
-    கவிஞர். மை. இராசா கிளைமாக்சு

************* 

தினமலர் (01.01.2015) ************


+2 மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் கூட்டம்
பள்ளி நிறுவனத்தலைவர் முன்னிலையில் நடந்தது.
மதுரை ஆ. கோசாகுளத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வில் மாநில அளவிலான ரேங்க் பெறுவது குறித்த உத்வேகக் கூட்டம் 29-11-2014 அன்று நூலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பள்ளி நிறுவனத் தலைவர் இராசா. கிளைமாக்சு, பள்ளித் தலைவர்                   இ. சாமி, செயலாளர் சவுந்தர பாண்டி, பொருளாளர் அசோக்ராஜ் கன்ட்ரோலர் பிரகாஷ், பள்ளி முதல்வர் ஹேமா ஆட்ரே ஆகியோர் கலந்து கொண்டனர்.
     பள்ளி நிறுவனத் தலைவர் இராசா கிளைமாக்சு அவர்கள் பேசுகையில், மாணவர்கள் அன்றைய பாடங்களை அன்றன்றே படிக்க வேண்டும். இங்கு பயிலும் மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் பெறும் வகையில் அதிக மதிப்பெண்களைப் பெறவேண்டும். உங்களது தேவைகளை பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் பூர்த்தி செய்கிறார்கள்.
     200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண்களைப் பெற்றால்தான் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்குகான வாய்ப்பு உள்ளது என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். மதிப்பெண்கள் குறைந்தால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்தான் இடம் தேட வேண்டும். அப்போது 75 லட்சம் வரை தந்து சீட் பெறும் நிலை ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு படித்தால் ரூ. 75 லட்சம் செலவழிக்காமலேயே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் பெறலாம்.
     அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவ கல்லூரியில் இடம் பிடிப்பேன் என்ற உறுதி மொழியை மாணவர்கள் எடுக்க வேண்டும். 200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெறுவதற்கு கடினமாகப் படிக்க வேண்டும். அப்படிச் செய்தால் படிக்கும் காலத்திலேயே ரூ.75 லட்சத்தை மாணவர்கள் சம்பாதித்தவர்களாகக் கருதப் படுவார்கள் என்றார்.
     பள்ளித் தலைவர் இ. சாமி பேசுகையில் மாணவர்கள் ரத்தம், நரம்பு சதை என அனைத்திலும் வெறி கொண்டவர்களாகப் படித்தால்தான் மதிப்பெண்களை குவிக்க முடியும். 50 லட்சம் பேர் டென்னிஸ்  விளையாட்டை விளையாடுகிறார்கள் 5 லட்சம் பேர் தொடர்ந்து பயிற்சி பெறுகிறார்கள். 50 ஆயிரம் பேர்தான் போட்டியில் ஆடுகிறார்கள். ஆனால் 500 பேர் தான் சர்வதேசப் போட்டிகளில் ஆடுபவர்களாக உள்ளனர். இதில் கிராண்ட் சிலாம் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன்,      யு. எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகளில் சிலர்தான் சாதனை படைக்கிறார்கள். இந்த சாதனையாளர்கள் கடும் உழைப்பை மேற்கொள்பவர்கள் ஆவார்கள். அவர்களைப் போல மாணவர்கள் பொதுத் தேர்விற்குக் கடினமாக உழைத்து மதிப்பெண்களைக் குவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். எம்பிபிஎஸ் படிக்கத் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 1823 இடங்களே உள்ளன. எனவே இந்த இடங்களைப் பிடிக்க மாநில அளவிலான மதிப்பெண்களைப் பெற்றால்தான் முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்
****************


தினகரன் (13.12.2014)


***************
தினமலர் (15.11.2014)
**************

கட்டுரைப் போட்டியில் 
சி.இ.ஒஏ மாணவருக்கு இரண்டாம் பரிசு
மதுரை சேதுபதி பள்ளியில் ‘சுற்றுப் புறச் சூழல்’ என்ற தலைப்பில் அக்டோபர் மாதம் 10ம் தேதியன்று பள்ளி மாணவர்களுக்கிடையேயான கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 30 பள்ளிகள் கலந்து கொண்டன.
இதில் சி.இ.ஒ.ஏ பள்ளி மாணவர் மு. லெட்சுமணன் 2 ம் பரிசு வென்றார். அவருக்கு ரூ2 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப் பட்டது. தேசிய பசுமைப் படை திட்டம் சார்பில் இப்போட்டி நடைபெற்றது. 
*********************** 


CII DONATES BOOKS TO SCHOOLS

Confederation of Indian Industries (CII) donated books to CEOA Schools On 28th October 2014 in a function organised in the School campus. On the occasion Dr. Rohini Sridhar, President, CII Madurai Chapter graced the function.

Chief Educational Officer Mr Angelo Irudhya Samy, Mr Arivudai Nambi, S.P of Central Prison, Madurai were also present as Special Guests. 


Founder Chairman Mr Raja Climax, Mr E. Samy, Chairman, Mr Prakash, Treasurer were present to receive the books. Various Schools in and around Madurai participated in the function to receive nearly 20,000 books donated by the CII.

 **************
NSS INAUGURATION FUNCTION

The National Service Scheme (NSS), an Indian government-sponsored public service program conducted by the Department of Youth Affairs and Sports which is a voluntary association of young people working for a campus-community linkage was inaugurated in CEOA School on 24th October, 2014.


Mr. Perumal Rajan of English department welcomed the gathering. Mr Brahmarishy explained the AIMS of  NSS to the students.
  Founder Chairman, Mr Raja Climax delivered the felicitation address.

Mr. Jaya Chandran, the Liaison officer of NSS at Madurai who was the Chief Guest on the occasion, inspired the students by his speech and motivated them to become better citizens of  our nation by joining hands with NSS which gives opportunity to develop leadership quality  and personality. He further guided the students to create awareness among the villagers for their development by organising special camps in villages. Mr Prakash, Treasurer and Mrs Hema Audrey , Principal were also present on the occasion.          Mime show was performed by the NSS students. The ceremony came to an end on  delivering of  Vote of  Thanks  by Mr. Ganathi Rajan.

*****************
  NATIONAL COMPETITION: CEOA SCHOOL STUDENT K. PAVITHRA WINS 1ST PRIZE
 K PAVITHRA (IX std) of CEOA matriculation Hr. Sec. School, Madurai has won the first prize and a cash award of Rs.53,000/- in the National Level drawing competition titled “Let’s make safe travel a priority” conducted by Tata Motors. In a function organized at Madurai, a cheque for Rs.53000/- was presented to Selvi K Pavithra by the GM Mr. Nevil Antony, ABT Industries and Mr. Shanmugasundaram, Tata Motors. CEOA School management committee and Principal Smt. Hema Audrey greeted the winning student.

******************
சி... பள்ளியில் அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர்
சி.இ.ஒ.ஏ பதின்ம மேனிலைப் பள்ளிக்கு அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் திரு ஜி.விஸ்வநாதன் அவர்கள் கடந்த செப்டம்பர் 17 அன்று வருகை தந்தார். அவர் பள்ளி ஆசிரியர்களுக்காக நூலக அரங்கில் சிறப்புரையாற்றினார்.
திரு ஜி.விஸ்வநாதன் அவர்கள் பேசியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது மாணவர்கள் மிகுந்த கட்டுப்பாடு, ஒழுங்கு முறைகளைக் கடைபிடிக்க சில உத்தரவுகளைப் பிறப்பித்தேன். பல்கலைக்கழகத்திற்குப் பாடம் படிக்க வரும் மாணவர்கள் ஜீன்ஸ் அணிந்து வரக் கூடாது என உத்தரவிட்டேன். கல்லூரி வளாகத்தில் செல் போன் பயன்படுத்தவும் தடைவிதித்தேன். கல்லூரி வளாக நிகழ்ச்சிகளில் நடிகர்கள் பங்கேற்க அழைக்கக் கூடாது என்றும் கூறினேன்.
இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இருப்பினும் எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் எங்கள் பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்கள் பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்வு பெற்றனர். எந்தப் பாடத்தையும் மாணவர்கள் புரிந்து படிக்க வேண்டும். பாடத்தில் உள்ள சாராம்சம் புரியாமல் மாணவர்கள் மனப்பாடம் செய்யக் கூடாது.
இங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்கள் தங்களது பாடங்களைப் புரிந்து கொள்ளும் வகையில் பாடம் நடத்த வேண்டும். 120 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 70 ஆயிரம் விஞ்ஞானிகள்தான் உள்ளனர். ஆனால் ஆண்டுதோறும் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் செல்கிறார்கள். எனக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் பணி செய்ய அழைப்பு வந்தது. ஆனால் இந்தியாவில் பணியாற்றுவதையே பெருமையாகக் கருதுகிறேன். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களுடன் ஏவுகணை தயாரிக்கும் திட்டப்பணியில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன்.
அண்ணா பல்கலைக் கழகத்தில் நான் துணைவேந்தராக பணியேற்ற போது எனக்கு 50 வயது அப்போது எனக்கு வாழ்த்து கூறிய அப்துல் கலாம் அவர்கள் மிக இளவயதில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக பொறுப்பேற்ற முதல் நபர் நான் என்பதைக் குறிப்பிட்டு வாழ்த்தினார்.
ஆசிரியர்கள் காலை 4 மணிக்கே எழுந்து நாளிதழ்கள், பள்ளியில் நடத்த வேண்டிய பாடங்களை படித்து வரவேண்டும். ஆங்கில நாளிதழ்களில் உள்ள முக்கிய அன்றாட நிகழ்வுகள் குறித்து, மாணவர்களுக்குப் போதிக்க வேண்டும். மதிப்பிற்குரிய அப்துல் கலாம் அவர்கள் திரைப்படம் பார்பதே கிடையாது. அவரைப் போன்று நானும் திரைப்படங்களைப் பார்ப்பது இல்லை. தரமற்ற டி.வி நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் சி.இ.ஒ.ஏ பள்ளி நிறுவனத் தலைவர் இராசா கிளைமாக்சு, பள்ளித் தலைவர் இ. சாமி மற்றும் கண்ட்ரோலர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
***********************


TALENT EXPO-2014
CEOA BAGGED OVER ALL CHAMPIANSHIP
CSR Memorial School at Tirunagar organised a Talent Expo 2014 on the 5th of September 2014. This Expo was a cultural competition event, wherein 14 schools in Madurai participated.
CEOA School students won many prizes that includes singing, pencil sketching, Quiz, foot loose, and dance competition.
CEOA School secured 80 points and bagged the over all championship in CSR Talent expo2014.
SPJ Matric School and CSR Matric School  shared the second place; both Schools secured 65 points each.
The CEOA School Stars who won various events on the day were:
SINGING
R. Sri divya                   VII  E                             I  Prize (Sr)
B. Akshaya devi            IX  E                             II Prize (S.Sr)
PENCIL SKETCHING
M. Sakthi Bala               VII A                              I  Prize.(Sr)
QUIZ
M. Aditya Pandian         VII C
M. Dharneesh                VII B  (Sr )                     II prize
FOOT LOOSE
R.Srinidhi                      VIII E (Sr)                      I prize.
DANCE TEAM (Sr)
B. Vasanth Kumar VIII A, M.Prasanth VIII B, C.P Anandhan, VIII A K.Aswin, VIII C, F.Bhagawath VIII A,  M. Vignesh Baran VIII A  have won the 1st  Prize.
**************


94 வயது ஆசிரியருடன் சி இ ஒ ஏ பள்ளி மாணவி கலந்துரையாடல்
   


மதுரை சி.இ.ஒ.ஏ பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் பவித்ரா 94 வயது ஆசிரியை குமராயி அவர்களை மதுரை டி எம் பி நகரில் தினமலர்  நாளிதழ் சார்பில் கலந்துரையாடினார்.  இந்த அனுபவம் குறித்து நமது பள்ளி மாணவி பவித்ரா கூறியதாவது.
94 வயது ஆசிரியை குமராயி அவர்களை சந்திக்கும் போது, மிகுந்த உற்சாகமாக இருந்தது. அந்த ஆசிரியை நீண்ட காலம் பழகியவரைப் போல தயக்கம் இல்லாமல் அன்பாக எங்களிடம் பேசினார்.
பழைய கால கல்வி முறையை அவர் எங்களிடம் இனிமையாக பகிர்ந்து கொண்டார். அவரிடம் பேசும் போது அந்த கால கல்வி முறையையும் நன்றாக அறிய முடிந்தது. இன்றைய கால இளம் தலைமுறையினர் தன்னம்பிக்கையுடன் முன்னேறும் வகையில் அவர் பேசினார். அவரை பார்த்தால் 94 வயது ஆசிரியரை பார்ப்பது போன்ற உணர்வே இல்லை. மிகவும் துடிப்புடன் உறுதியாக பேசினார். பாடத்தை விரும்பி படிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு மாணவி பவித்ரா தெரிவித்தார்.
************************

சி ...ஏ  பள்ளி ஊழியர் காலமானார்

மதுரை அ. கோசாகுளத்தில் உள்ள சி...ஏ பள்ளியில் கடை நிலை ஊழியராகப் பணியாற்றியவர் பாலாமணி. அவர் இந்த செப்டம்பர் மாதம் ஆறாம் தேதியன்று காலமானார். அவருக்கு வயது 46. கடந்த 2010 முதல் நான்கு ஆண்டுகள் சி... ஏ பள்ளியில் பணியாற்றினார். மரணமடைந்த ஊழியருக்கு பள்ளி நிர்வாகம் தனது அஞ்சலியை செலுத்தியது.
****************

தினமலர் (14.09.2014)
***********

தமிழ் சுடர் (12.09.2014)


********************Palanivel  Rajan, English Teacher of CEOA School, A. Kosa Kulam was selected, as Best Teacher in Madurai District, by rotary club of Madurai Star.This award winning function was organised on 11th September in the city hotel J.C Residency. On the occasion CEOA School management committee greeted the award winning teacher.
***
தினமலர் (26.08.2014)

***********
தமிழ் சுடர் (25.08.2014)

***********

தினமலர் (21.08.2014)
 ***********
*************
 தமிழ் சுடர் (27.07.2014)


SSLC EXAM STATE III RANK HOLDERS
 HONOURED BY DISTRICT COLLECTOR
MADURAI
*********


********

தினமலர் (11.07.2014)
************

THE NEW INDIAN EXPRESS (12.07.2014)

தினமலர் (05.07.2014)
 *****
 தினகரன் (04.07.2014)

*******
தினகரன் (24.05.2014)
 ***********

தினமணி (24.05.2014)
**************
தினத்தந்தி (24.05.2014)
**********
 தமிழ் சுடர் (24.05.2014)
 ***********
THE NEW INDIAN EXPRESS (24.05.2014)
****************************

தமிழ் சுடர் (12.05.2014)
**************************

************
2014 ஆம் ஆண்டு  +2 தேர்வில் 
சி.இ.ஓ.ஏ பள்ளி மாணவர்கள் சரித்திர சாதனை 
+2 தேர்வில் மதுரை மாநகரில் இதுவரையில் இல்லாத அளவில் சி.இ.ஓ.ஏ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சரித்திர சாதனை படைத்துள்ளது. 

இப்பள்ளி மாணவி லலிதா 1186 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் பெற்றுள்ள மதிப்பெண்கள் (பாடவாரியாக) - தமிழ்  192,  ஆங்கிலம் 195  கணிதம் 200  வேதியல்  200 கணினி அறிவியல் 200 இயற்பியல்  199  
இதே பள்ளி மாணவர்களில் 4 பேர் 200/200 பொறியியல் கட் ஆப் மார்க் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.  இதுவரை இப்படிப்பட்ட சாதனை ஒரே பள்ளியிலிருந்து மாநிலத்தில் இதுவரை நிகழ்த்தப்பட்டதில்லை.  இதன் மூலம்  மாநில அளவில் கட்ஆப் மதிப்பெண்ணை 4 மாணவர்கள்  பிடித்திருப்பது  சரித்திர சாதனையாகும்.
மேலும் ஒரு சாதனையாக இப்பள்ளி மாணவர்கள் 113 பேர்  கணக்கு, உயிரியல், வேதியல், இயற்பியல், கணினி அறிவியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், ஆகிய பாடங்களில் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவர்களில் 63 மாணவர்கள் 1150 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 223 மாணவர்கள்  1100 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.   
பல்வேறு அளவில் மாநில மற்றும் மாவட்டச் சாதனை படைத்த பள்ளி மாணவர்களை பள்ளி நிறுவனர்- தலைவர் திரு இராசா கிளைமாக்ஸ்,  பள்ளியின் தலைவர் இ.சாமி,  துணைத்தலைவர் திரு விக்டர் தனராஜ், பொருளாளர் திரு அசோக்ராஜ், செயலாளர் திரு சவுந்திரபாண்டியன், கண்ட்ரோலர் திரு பிரகாஷ், செயற்குழு உறுப்பினர் திரு ஜெயசந்திரபாண்டி மற்றும் பள்ளி முதல்வர் திருமதி ஹேமா ஆட்ரே ஆகியோர் வாழ்த்தினர்.
******************

தினமலர் (21.03.2014)

**********************
**************************
REPUBLIC DAY

 CELEBRATIONS – 2014

       


   The Republic Day, which brings in our memory the dauntless services rendered by the veteran leaders of our country to transform the Independent India in to a Republic, was celebrated with much festivity in our schools on 26th January, 2014.

   Mr. S. Somasundaram, Superintendent of Customs & Central Excise, Madurai Airport unfurled the National Flag at the Main Building at Kosakulam. The Chief Guest gave a narrative picture of our leaders’ struggles in bringing together the states and samasthans into the federal system by enacting the Constitution of India on this day. 

  He stressed the need and the importance of education and wished the students achieve greater heights by respecting the elders, parents and teachers. The Chief Guest distributed prizes to the winners of the Science Exhibition and various other competitions held last year.   

  Mr V.Arjunan, Superintendent of Customs & Central Excise, Madurai Airport hoisted the Tricolour at the Officers’ town building in Kanagavel Avenue and  articulated the need for the students to keep their  body and mind healthy thereby building a healthy future world.  The Chief Guest gave away the prizes to the winners of various competitions held in the school on the occasion.
  Students rendered speeches in Tamil, English and Hindi that truly kindled the patriotic feelings in the hearts of students, parents and all present at the celebrations. Lovely and colourful Bharatanatyam performances by our students on the day were feast to our eyes.
***************
  
தினத்தந்தி (04.01.2014)


**************


தினமலர் (04.01.2014) 


********


CEOA STUDENTS SEQUENTIAL DATEC.E.O.A School students, Madurai, displaying the human formation to show the last sequential date of this century. They performed this event, at the School Ground on that day (11.12.13)
****************************
ஈரோடு

திருவள்ளுவர் கல்விமையம்

சி.இ.ஒ.ஏ பள்ளிக்கு பாராட்டு


        ஈரோட்டில் உள்ள திருவள்ளுவர் கல்வி மையம் சி.இ.ஒ.ஏ பள்ளிச் சாதனையை பாராட்டி சான்றிதழ் அளித்துள்ளது. 2013 ம் ஆண்டில் மாநில அளவில், மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் கலை இலக்கியப் போட்டிகளை இந்த கல்விமையம் நடத்தியது.


இதில் மதுரை மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற சி.இ.ஒ.ஏ மேல் நிலைப் பள்ளிக்கு ‘கலை வளர் பள்ளி விருது’ – ஐ இந்த ஈரோடு கல்வி மையம் அறிவித்துச் சிறப்பித்துள்ளது.

இந்த கல்வி மையத்தின் தலைவர் பா. மாரிமுத்து, செயலாளர் வி. குமார் ஆகியோர் கையெழுத்திட்ட சான்றிதழும், சி.இ.ஒ.ஏ. பள்ளிக்கு அளிக்கப் பட்டுள்ளத
                                          ****************
  சி.இ.ஒ.ஏ. பள்ளிக்கு
தினத்தந்தி நாளிதழ் பாராட்டு
தினத்தந்தி நாளிதழ் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அரசு பொதுத் தேர்வில் முதல், இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசு அளிக்கிறது.


2013 ம் ஆண்டு 10 ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) அரசுப் பொதுத் தேர்வில் சி.இ.ஒ.ஏ, பள்ளி மாணவி மு. துவாரகா, மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துச் சாதனை படைத்தார். இப்பள்ளியைச்  சேர்ந்த    மு. வைஷ்ணவி துர்கா மாநில அளவில் 3 வது இடத்தைப் பிடித்து உள்ளார். இந்த இரண்டு மாணவிகளும் மதுரை மாவட்ட அளவிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு மாணவிகளின் சாதனைகளை, தமிழகத்தின் முன்னணி தமிழ் நாளிதழான ‘தினத்தந்தி’ பாராட்டி சிறப்புச்சான்றிதழ் அளித்துள்ளது.
 
         இந்தச் சான்றிதழ் சாதனை மாணவிகளை உருவாக்கிய சி.இ.ஒ.ஏ பள்ளிக்குத் தரப்பட்டுள்ளது. அந்த நாளிதழின் இயக்குனர்  சி.பாலசுப்பிரமணியன்  ஆதித்தன் பள்ளிக்குப் பாராட்டு தெரிவித்துச் சான்றிதழில் கையொப்பமிட்டுள்ளார்.

**************


சி.இ.ஒ.ஏ பள்ளி
மாணவர் கிருபாகரன் சாதனை

 மதுரை மாவட்ட பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் சிறுபான்மை நலத்துறைசார்பில், மாவட்ட அளவில், அதிக மதிப்பெண் பெறும் இந்தப்பிரிவு மாணவருக்கு ரூ. 6 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. 2013 ம் ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் 1177 மதிப்பெண்கள் பெற்ற எஸ். கிருபாகரனுக்கு ரூ. 6 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.


சாதனை படைத்த சி.இ.ஒ.ஏ பள்ளி மாணவர் எஸ். கிருபாகரனை மாவட்ட ஆட்சித்தலைவர் இ.. சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.
***********R. BRINDHA


RECEIVES

TAMIL NADU GOVERNMENT's  CASH PRIZE

                   Our school student R. Brindha, who appeared in March / April 2013, 10th public examination has got 1st place in Schedule Caste / Tribal / Converted Christian category in Madurai District.

                   The Tamil Nadu Government appreciated this achievement and awarded a prize money of  Rs. 2000/- for her.

(As informed by the Director of Schedule caste welfare Department, Tamil Nadu  )

  **************


மாணவி ஆர். பிருந்தாவுக்கு

தமிழக அரசின் பணப்பரிசு

           சி.இ.ஒ.ஏ பள்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். பிருந்தா. இவர் 2013 ம் ஆண்டு மார்ச்/ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மதுரை மாவட்ட அளவில் ஆதி திராவிடர் / பழங்குடியினர்/ மதம் மாறிய கிறிஸ்தவ ஆதி திராவிடர் பிரிவுகளில் முதலிடம் பிடித்துள்ளார். அவரது சாதனையைப் பாராட்டி தமிழக அரசு ரூ. 2 ஆயிரம் பரிசு அளித்தது. இதனை ஆதி திராவிடர் நலத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
************
சமூகப் பணியில் சி... பள்ளி ஆசிரியர்

மதுரை ஊமெச்சிக்குளம் திருமால்புரத்தை மேம்படுத்தும் பணியில் நமது சி... பள்ளி உடற்கல்வி ஆசிரியர் வி.செல்லமுருகன் முன்னோடியாக திகழ்ந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள சுகதாரச்சீர் கேடுக்களை அகற்றி சிறப்பாக செயல்படுவதற்கு சமத்துவ இளைஞர் நற்பணி மன்றமே காரணமாகும். இந்த மன்றத்தை துவங்குவதற்கா பின்னணியில் ஆசிரியர் வி. செல்லமுருகன் உள்ளார்.

2009ம் ஆண்டு முதல் மதுரை புதுநத்தம் சாலையில் இந்த நற்பணி மன்ற கட்டிடம் செயல்படுகிறது. இதன் தலைவராக தாமோதர கண்ணன் உள்ளார். மன்றம் சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சி தரப்படுகிறது. இதன் 80 றுப்பினர்களும் கண் தானம் செய்துள்ளனர்.


                                                                                                               V. CHELLAMURUGAN

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.